Saturday, August 27, 2011

24/10/09 அன்றுTCS-ல் நடைபெற்ற பாட்டு போட்டிக்காக காஷ்மீரில் ஒரு தேநீர் விடுதியில் உட்கார்ந்து எழுதப்பட்டது

பாரத நாட்டில் நித்தம் நித்தம் தொங்கும் தோரணம்!
பூமியில் உள்ள ஜீவன்கள் எல்லாம் இங்கு வாழனும்! (2)

பல வண்ணங்கள் பூசிடும் ஹோலி!- கொஞ்சும்
பொம்மைகளின் நவராத்திரி! (2)

உழவனை வாழ்த்தும் பொங்கலைப் போலே பண்டிகை ஏது ஊரில்?
கிறிஸ்துமஸ் தாத்தா அன்பளிப்புகள் டிசம்பர் இருபத்தி ஐந்தில்!

புத்தன் பிறந்ததை கொண்டாடிடும் நாள் புத்த பூர்ணிமா!

(புத்தம் சரணம் கச்சாமி! தம்மம் சரணம் கச்சாமி)-2

புத்தன் பிறந்ததை கொண்டாடிடும் நாள் புத்த பூர்ணிமா!
அவன் அஹிம்சையில் மலர்ந்த சுதந்திர தினத்துக்கு ஈடு ஆகுமா? ஈடு ஆகுமா?
(பாரத நாட்டில்)

பிகு திருநாளில் பொங்கிடும் அஸ்ஸாம் ஆர்கிட் பூக்களைப் போலே
வண்ண வண்ணமாய் வான வேடிக்கை தீபாவளி திருநாளில்!

ஈகை அளித்து இன்பம் காணும் ஈது பண்டிகை!

(அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் அக்பர் அல்லா
லா ஹி லாஹா! இல்லல்லா!)

ஈகை அளித்து இன்பம் காணும் ஈது பண்டிகை!
வெறும் ஏழு ஸ்வரத்தில் எத்தனை ராகம் திறங்கள் செவிகளை!
(பாரத நாட்டில்)

No comments:

Post a Comment