சீக்கிரம் வெளிய வாங்கப்பா
(நான்கு பேர் தூங்கி கொண்டு இருக்க யாரோ இருவர் அவர்களின் கனவில் வந்து
பாடி பேசுகிறார்கள் )
ஏ! சின்னப் பயல்களே, சின்னா! ரவி!
எந்திரி ! எந்திரி! எந்திரி!
குழு: நீ எந்திரி ! எந்திரி! எந்திரி!
செத்து போன உன் பூட்டனும் பாட்டனும்
வந்தோம்! வந்தோம்! எந்திரி!
குழு: இங்கே வந்தோம்! வந்தோம்! எந்திரி!
பூட்டன்: அடே சின்னா! நான் தான்டா செத்துப்போன உன் பூட்டன்!
பாட்டன்: அடே! ரவி ! நான் தாண்டா செத்துப்போன உன் பாட்டன்!
பூட்டன்: பாத்தியா பங்காளி! இவனுங்களாவது பொழச்சிப்பானுன்கன்னு பாத்தா இன்னும் கொத்தடிமையாவே சுத்திக்கிட்டு இருக்கானுங்க!
பாட்டன்: அதுவும் நம்ம வேலை பாத்த அதே வீரப்பன் மிஷீன்ல தான் கொத்தடிமையா இருக்கானுங்க!
பூட்டன்: அடே பேரப்பயலே சின்னா! அந்த காலத்துல உன் பூட்டிக்கு பிரசவம் பாக்க உங்க முதலாளி வீரப்பனோட தாத்தா கிட்ட 10 ரூவா வாங்குனேன்!
பாட்டன்: நானும் தாண்டா கொத்தாளா! கிட்டத்தட்ட 150 வருஷம் இருக்கும்! அப்போ வயித்துக்கு வழியில்லாம சுத்தி சுத்தி உங்க முதாளியோட தாத்தா கிட்ட வேலைக்கு சேர்ந்தேன்!
பூட்டன்: அப்புறம் உங்க பாட்டன்
பாட்டன்: அப்புறம் உங்க தாத்தா
பூட்டன்: அப்புறம் உங்க அப்பன்
பாட்டன்: அப்புறம் நீங்க!
பூட்டன் மற்றும் பாட்டன்: இது தாண்டா நீங்க கொத்தடிமையான வரலாறு!
பூட்டன்: நான் அன்னைக்கு வாங்குன 10 ரூபாய தாண்டா நீங்க இன்னும் திருப்பி கட்டிக்கிட்டு இருக்கீங்க!
பாட்டன்: டே கொத்தாளா, சின்னா! நீங்க மட்டும் இல்லடா! அங்க படுத்துருக்கானுங்களே! கொத்தாளன், ராமன், உன் குடும்பம்! அவன் குடும்பம்! யாரும் அவனுக்கு கொத்தடிமையா இருக்க வேண்டிய அவசியமே இல்ல!
பூட்டன்: எல்லாரோட பூட்டனும் பாட்டனும், இங்க பரலோகத்துல, உங்களுக்காக பொலம்பிக்கிட்டு இருக்கானுங்க!
பாட்டன்: ஏன்டா உங்களுக்கு வேற வேலையா கிடைக்கல! உலகம் எவ்வளவு முன்னேறுடுச்சுடா?
பூட்டன்: பக்கத்துலேயே எவ்வளவு கம்பெனி இருக்குடா?
பாட்டன்: போறவனுக்கு எல்லாம் வேலை தர்றான்!
பூட்டன்& பாட்டன் : சீக்கிரம் தூக்கத்துல இருந்து எந்திரிங்கடா! சீக்கீரம் இந்த கொத்தடிமைய விட்டு ஓடியாங்கடா!
ஏ! சின்னப் பயல்களே, சின்னா! ரவி!
எந்திரி ! எந்திரி! எந்திரி!
குழு: நீ எந்திரி ! எந்திரி! எந்திரி!
அடிமை தூக்கம் கலைஞ்சு போகவே
அடிச்சு பெரண்டு எந்திரி!
குழு: ஆமா! அடிச்சு பெரண்டு எந்திரி!
(உடனே சின்னாவும் ரவியும் எழுந்து விடுகிறார்கள். எடுத்த மாத்திரத்தில் அய்யோ அம்மா என்று அலறுகிறார்கள், மற்றவர்களும் எழுந்து விடுகிறார்கள்.)
சின்னா: டே ரவி!உங்க தாத்தா வந்தாருடா!
ரவி: உங்க தாத்தாவும் வந்தாருடா!
கொத்தாளன்: டே! அர்த்த ராத்திரியில உங்க முகத்த பாக்குரத்துக்கே பயமா இருக்கு! உங்க தாத்தா முகத்த வேற பாத்தீங்களா?
ராமன்: என்ன கேட்டாங்க? பிரியாணியா? பட்டை சாராயமா?
சின்னா: சும்மா இருடா ராமா! நம்ம பாட்டன் பூட்டன் எல்லாம் பரலோகத்துல நமக்காக ரொம்ப வருத்த படறாங்களாம்.
ராமன்: வருத்தமா? எதுக்காம்?
ரவி: டே! நம்ம நெனச்ச மாதிரி நம்ம பாட்டனுன்களோ தாத்தாவோ பெரிய அமௌன்ட் ஒன்னும் வாங்கல! வெறும் 10 ரூவா தான்!

சின்னா: வெறும் 10 ரூபாய்க்கு தான் நம்மள கொத்தடிமையா
ஆக்கிட்டாங்க.
கொத்தாளன் & ராமன்: கொத்தடிமையா?
ராமன்: நம்மளா?
ரவி: அப்படி தான் இவன் பூட்டனாறு
சொன்னாரு!
சின்னா: அப்படி தான் இவன் பாட்டனாரும்
சொன்னாரு!
கொத்தளான்: நமக்கு தான் நம்ம எசமான்
தங்க இடம் கொடுத்து
கூழுல்லாம் ஊத்துறாரே ?!
ராமன்: ஒரு வேளை நீ கொத்தடிமையோ?
கொத்தாளன்: ஒரு வேளை நீ கொத்தடிமையோ?
ரவி & சின்னா: ஒரு வேளை நீ கொத்தடிமையோ?
குழு: யாரு கொத்தடிமை? யாரு கொத்தடிமை?
_____
வந்தாரையா வக்கீலு!
வானத்த தாண்டி வந்தாரையா வக்கீலு!
குதிச்சாரையா வக்கீலு!
கருகரு கருவென கவுனு தொங்க,
அக்கிள் இடுக்குல பேப்பர் கட்டோட
(வந்தாரையா)
வக்கீலு : டே! என்னங்கடா மாப்பிள்ளைகளா! என்னங்கடா குழப்பம்? என்ன பிரச்சினை உங்களுக்குள்ள?
சின்னா: வக்கீலு மாமா! எங்க பூட்டனாரு கனவுல வந்தாரு!
வக்கீலு: என்னவாம் அவருக்கு?
ரவி: நாங்க வாங்குற கூலி ரொம்ப குறைச்சலாம்!
வக்கீலு: சரி!
சின்னா: வெளியில நல்ல வேலை எல்லாம் கிடைக்குதாம்
வக்கீலு: சரி!
கொத்தாளன்: நாங்க எல்லாம் கொத்தடிமையா இருக்கோமாம்!
வக்கீலு: சரி!
ராமன்: இந்த இடத்த விட்டு போகணுமாம்!
வக்கீலு: சரி!
குழு: நாங்க எல்லாரும் கொத்தடிமையா வக்கீலு மாமா?
தானனனான தானனனான தானனனானா
தானனனான தானனனான தானனனானா
தானனனான தானனனான தானனனானா
குறஞ்ச கூலிக்கு வேலை செய்யிற குப்பன்
கொத்தடிமை!
குறஞ்ச கூலிக்கு வேலை செய்யிற குப்பன் கொத்தடிமை!
குறஞ்ச கூலிக்கு வேலை செய்யிற குப்பன் கொத்தடிமை!
நவுர விடாம ஒரே இடத்துல அடைச்சா கொத்தடிமை! –வெளியே
நவுர விடாம ஒரே இடத்துல அடைச்சா கொத்தடிமை!
கொத்தடிமை! கொத்தடிமை! கொத்து கொத்தா கொத்தடிமை!
மார்கெட் ரேட்டுக்கு விக்க விடாம தடுத்தா கொத்தடிமை! - வெளியே
மார்கெட் ரேட்டுக்கு விக்க விடாம
தடுத்தா கொத்தடிமை!
வேற இடத்துல வேலைக்கு சேர விடலனா
கொத்தடிமை! - வெளியே
வேற இடத்துல வேலைக்கு சேர விடலனா
கொத்தடிமை!
கொத்தடிமை! கொத்தடிமை! கொத்து கொத்தா
கொத்தடிமை!
கொத்தாளன்: ஐயா! கொறஞ்ச கூலிக்கு வேலை செய்றதா சொன்னீங்களே! குப்பன்! அவன் யாரு?
ராமன்: அவன் கதை என்ன?
வக்கீலு: குப்பன் செங்கல்சூளைல வேலை பாத்தான். அவன் கதைய நீயே பாரு!
(ஒரு வரிசையில நான்கு பேர் நிற்க ஒருவர் பணம் பட்டுவாடா செய்கிறார்.)
ஒருவன்: சோமு! 50 ரூவா! குட்டி! 45 ரூவா!
குட்டி: ஐயா! ஏன்யா?
ஒருவன்: ஏனா? பிள்ளைக்கு உடம்பு சரியில்லன்னு மாத்திர வாங்குநீயே? உங்க அப்பனா வந்து தருவான்?
ஓடு!
குட்டி: மறந்துருச்சுங்கையா!
ஒருவன்: மறக்கும்! மறக்கும்! குறுக்குல ஒன்னு வெச்சா ஞாபகம் வந்துரும்.
ஒருவன்: அடுத்த ஆளு எவன் டா? இந்தா! 40 ரூவா!
(குப்பா! டேய்! குப்பா! (குப்பன் கைகாலை கழுவிக்கொண்டு இருக்க)
ஒருவன்: என்ன மாப்பிள்ளை பாக்கவா போறது? போதும்! போதும்!
குப்பன்: வந்துட்டேன்னே!
ஒருவன்: தொட! வர்றியா? போட்டா?
(குப்பன் ஓடி வருதல்)
குப்பன்: என்ன அண்ணே! கூட பத்து ரூவா போட்டுக்குடுங்கன்னே!
ஒருவன்: அடிங்க நாயே! கேள்வி கேக்குற அளவுக்கு ஆளாயிட்டியா?
குடுக்குறத வாங்கிகிட்டு போயிரு! உனக்கு தங்க இடம் கொடுத்து 50 ரூபா கொடுக்குரதே பெருசு! இதுல கூட 10 ரூவா கேக்குதா? யாரு உன் பொண்டாட்டி கேக்க சொன்னாளா?
குப்பன்: அவ இல்ல அண்ணே!
ஒருவன்: என்னடா எதிர்த்து பேசிகிட்டே இருக்க? டேய்...
(அடிக்க ஆரம்பிக்கிறான்)
"கொத்தடிமை! கொத்தடிமை! கொத்து கொத்தா கொத்தடிமை!"- பாடல்
(காட்சி மாற்றம்)
வக்கிலு: பாத்தீங்களா? ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு குறைஞ்ச பட்ச கூலி இருக்கு!
செங்கசுளைன்னா எட்டு மணி நேரத்துக்கு, 120 ரூவா!
ரைஸ்மில்லுனா 138 ரூவா!
ரவி: இதுவும் 8 மணி நேர வேலைக்கா?
வக்கிலு: ஆமாய்யா! உப்பளம் னா 120 ரூவா! அதுவும் 8 மணி நேர வேலைக்கு தான்!
ராமன்: மாப்ளே! அதுக்கு மேல வேலை பாத்தா எவ்வளவு கெடைக்கும்னு கணக்கு போட்டு பாத்துக்கோ!
வக்கிலு: குறைஞ்ச பட்ச கூலிக்கு கீழே வேலைபாக்குற எவனா இருந்தாலும்...
குழு: கொத்தடிமை!
வக்கீலு: அவன் மட்டுமா கொத்தடிமை! நம்ம சுப்புராஜு கூடத்தான்!
பெரியம்மா செத்து போச்சு சுப்புராஜு!- சாவை
தூக்கிட வந்துசேரு சுப்புராஜு!
அரை வயித்து கஞ்சி செஞ்சு, சுப்புராஜு! - உனக்கு
கால்வயிறு ஊத்துனவ சுப்புராஜு!
சுப்புராஜு: யம்மா! ஐயோ! அம்மா! உன்னை விட்டுட்டேனே தாயி!
மனைவி: த பாரு! அழாதே!
சுப்பு: பாவி மகளே ! எங்க அம்மா செத்துபோனதே தெரியாம வளத்தவடி! அழகூடவா கூடாது?
மனைவி: ஒனரு கிட்ட ஓடு! அஞ்சு பத்தை வாங்கிகிட்டு சாவுக்கு போயிட்டு வருவோம்!
(owner வந்துவிடுதல்)
owner : என்னங்கடா வேலை செய்யற இடத்துல சண்டை!
சுப்பு: ஒனரு! எங்க பெரிம்மா செத்து போச்சு சாமி!
(அழுகை)
மனைவி: ஐயா! கொஞ்சம் தயவு பன்னுங்கையா
ஒனரு: அம்மா ராணி! நீங்க இங்க இருங்க!
உங்க ராசா போயிட்டு வந்து உங்களோட சேந்துப்பாரு!
(பெரியம்மா செத்து போச்சு சுப்புராஜு பாடல் மீண்டும் ஒலிக்க.... சுப்புராஜு அழுதுகொண்டே செல்ல)
ஒனரு: டேய் சுப்பு! பஸ் காசை உன் வீட்டம்மா கூலியில கழிச்சுகுறேண்டா! அப்புறம் கணக்கு கேட்டு தொல்லை பண்ணாத!
(காட்சி மாற்றம்)
வக்கிலு: அவன் தான் சுப்புராஜு!
ரவி: இவனுமா கொத்தடிமை?
ராமன்: விடிய விடிய பாட்சா படம் பாத்து ரஜினிக்கு நக்மா பெரியம்மான்னு சொன்னானாம்!
ரவி: என்னடா சொல்றீங்க?
ராமன்: அடப்பயலே! வேலை பாக்குற இடத்த விட்டு, அத்தியாவசியமான தேவைக்கு கூட வெளியே அனுப்பலனா அதுவும் கொத்தடிமை தான்!
வக்கிலு: அப்போ...
குழு: சுப்புரசுவும் கொத்தடிமை.
(காட்சிமாற்றம்)
" வேரும் குலையுமா தூசி மண்ணுமா விளைஞ்சு கிடக்குது பச்சைகடலை!
கறிகாய் வாங்க காசு தேறுமா சந்தையில போயி விக்கயிலே!"
சீனி : ஒய்! என்ன பாட்டு பட்டைய கிளப்புது!
காளை: நல்லா விளைச்சல் சீனி! சந்தையை விக்கலாம்னு தான் எடுத்துட்டு போறேன்! நூத்தம்பது ரூபா தரமாட்டான் அந்த மளிகைக்கடை தாண்டவராயன்?
சீனி: நடத்து! நடத்து! உன் காட்டுல மழை தாண்டோய்
(வேரும் குலையுமா... என்று பாடிகொண்டே காளை செல்ல சீனி பன்னையிடம் வருகிறான்)
காளை: என்ன பண்ணை? அந்த காளை உன் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதுல விளைஞ்ச கடலைய சந்தைக்கு பொய் வேற யாரு கிட்டயோ விக்கிறனாமே?
பண்ணை: இந்த தடவையுமா அப்படி செய்யறான் படுவா! பிடிங்கடா அவனை...
(காளையை கம்புகள் வைத்து பிடிக்கிறார்கள்)
காளை: ஏய்! எதுக்குடா என்னை பிடிக்கிறீங்க?
பண்ணை: ஏண்டா? என்ன கையில?
காளை: வேர்கடலை, பண்ணை!
பண்ணை: எங்க எடுத்துட்டு போற மாதிரி?
காளை: சந்தைக்கு
பண்ணை: எதுக்கு?
காளை: விக்கத்தான்
பண்ணை: அடிங்க ங்கொப்பம்மவனே! என்ன தைரியம் இருந்தா அந்த கடலைய எனக்கு விக்காம சந்தையில விப்ப?
காளை: உங்களுக்குன்னா 50 ரூபாய்க்கு கேப்பீங்க! சந்தையில நூத்தம்பது ரூபாய் போகும்ல! நானும் காசு பாக்கவேன்டாமா பண்ணை?
பண்ணை: ஓ! அவ்வளவு வெவரமா? என்? நீ காசு பாக்கறதுக்கு என் நிலம் தான் கெடச்சுதா? இங்க பாரு! என் நிலத்துல வேலை பாத்தா உன் பொருளை எனக்குத்தான் விக்கணும்! அதுவும் நான் சொல்ற ரேட்டுக்கு தான் விக்கணும். மீறி நடந்துச்சு, கைய காலை வெட்டிருவேன்!
காளை: ஐயா! பாத்து செய்ங்கையா!
பண்ணை: செய்வாங்க! செய்வாங்க! பாத்து! குடுறா கடலைய! புடி இந்தா 75 ரூபா!
காளை: ஐயா! வழக்கத்துக்கும் குறைச்சலா இருக்கே ஐயா!
பண்ணை: என்னை மீரிக்கிட்டு போனியே! அதுக்கு தண்டனை! ஓடிப்போ!
(சோகமாக)
"வேரும் குலையுமா தூசி மன்னுமா விளைஞ்சு கிடந்தது பச்சைகடலை!
வழியில வந்த பண்ணைக்காரு அந்த சந்தையில போயி விக்கவிடல!"
காட்சிமாற்றம்:
வக்கீலு: மார்கெட் ரேட்டுக்கு பொருளை விக்க விடாம தடுத்தா அதுவும் கொத்தடிமை தான்!
கொத்தாளன்: வேர்கடலை மட்டுமா?
வக்கீலு: வேர்கடலையா இருந்தாலும் சரி. கீரை, சோளம்ன்னு எதுவா இருந்தாலும் சரி. உன் பொருளை மார்கேடுல விக்கிறது உன் இஷ்டம்! அதை எவனாவது தடுத்தா
"கொத்தடிமை! கொத்தடிமை! கொத்து கொத்தா கொத்தடிமை"
காட்சிமாற்றம்:
பச்சை:
தின்னாதங்குறான்! தூங்காதங்குறான்!
வேலைய மட்டும் பாருங்குறான்!
மிஞ்சுன சோத்தை மாட்டுக்கு வைக்கிறான்!
மனுஷனுக்கு மறுக்குறான்! - ஐயோ
மனுஷனுக்கு மறுக்குறான்!
கூலிய கேட்டா நோட்டை எடுக்கிறான்!
புரியாத எழுத்த காட்டுறான்!
லாரிய ஏத்துவேன்!- காலை ஒடிப்பேன்
கைய வெட்டுவேன்னு மிரட்டுறான்!- ஐயோ
கைய வெட்டுவேன்னு மிரட்டுறான்!
குழு: அதனால என்ன செய்ய போற?
1 : வேற கம்பெனியில வேலைக்கு சேரப்போறேன்! அங்க கூலியாவது கூட கிடைக்கும்.
முதலாளி: எவண்டா என்னைவிட்டுட்டு வேற வேலைக்குபோறவன்?
1 : நான் தான்!
முதலாளி: நீ தானா மவனே? அவ்வளவு துணிச்சல் ஆகிப்போச்சா?
1 : செத்தாலும் உங்ககிட்ட இனிமே வேலைக்கு சேரப்போறது இல்ல!
முதலாளி: அப்போ நீ வாங்குன அட்வான்ஸ உங்கப்பனா கொடுப்பான்?
1 : அதுக்கு தான் இவ்வளவு நாளு வேலை பாத்தேனே?
முதலாளி: அந்த கணக்குப் பாத்தா (ஒரு சின்ன நோட்டை எடுத்து பையில் இருந்து எடுத்து)
நீ இன்னும் 6 ௦௦௦ ரூபா தர வேண்டி இருக்கே!
பச்சை: ஐயோ! நான் 15 வருஷமா வேலை பாக்குறேனே!
முதலாளி: அதனால தான் 4000 ரூபாயாவது கொறஞ்சு இருக்கு!
பச்சை: நான் வெளியே வேலைக்கு போயே தீருவேன்!
முதலாளி: உன்னை போட்டுதள்ளியே தீருவேன்!
"கொத்தடிமை! கொத்தடிமை! கொத்து கொத்தா கொத்தடிமை!"
வக்கீலு: மக்களே! புரிஞ்சுதா?
குறைஞ்சபட்ச கூலிக்கும் கம்மியா வேலை செய்யிற குப்பன் யாரு?
(கொத்தடிமை என்று மக்களிடம் இருந்து ஒவ்வொரு முறையும் சொல்லச்செய்தல்)
(அதற்கு ஏற்றாற்போல் குப்பனை நடித்தவர் ஒரு சங்கிலியை சுற்றிக்கொண்டு நிற்கிறார்)
"கொத்தடிமை! "
வெளியே எங்கயும் நவுர முடியாம வேலை செய்யிற இடத்துலேயே அடைஞ்சு கிடந்தா அவங்க யாரு?
"கொத்தடிமை!"
மார்கெட்டு ரேட்டுக்கு உங்க பொருளை விக்கமுடியாம அதை விட குறைஞ்ச ரேட்டுக்கு குடுக்க வேண்டியது வந்தா அவங்க யாரு?
"கொத்தடிமை"
அட்வான்சுன்கிற பேர்லையோ, உயிரே எடுத்துருவேன்னோ மிரட்டப்பட்டு வேற இடத்துல வேலைக்கு போக முடியாம இருந்தா அப்ப அவங்க யாரு?
"கொத்தடிமை"
கொத்தடிமை! கொத்தடிமை! கொத்து கொத்தா கொத்தடிமை"- பாடல்
குப்பன்: நான் செய்யிற வேலைக்கு குறைஞ்சபட்ச கூலி வாங்குறது என் உரிமை!
சுப்புராஜு: நினைச்ச இடத்துக்கு நினைச்ச நேரத்துக்கு என் பொண்டாட்டி பிள்ளையோட போறது என் உரிமை!
காளை: நான் உழைச்சு உற்பத்தி பண்ண பொருளை மார்க்கெட் ரேட்டுக்கு விக்கிறது என் உரிமை!
பச்சை: எப்ப வேண்ணாலும் பிடிக்காத வேலையில இருந்து நிக்கிறதும் புது இடத்துல வேலைக்கு சேருறதும் என் உரிமை.
வக்கிலு: அவங்களுக்கு மட்டுமில்ல! சட்டப்படி உங்க எல்லாருக்கும் இது எல்லாமே உங்க உரிமை!
உரிமை! உரிமை! உரிமை!- இது
எல்லாம் நம்ம உரிமை!-இந்த
உரிமை இல்லா மனுஷன்- அவன்
பேரு கொத்தடிமை!
ராமன்: டேய்! அப்போ நம்ம எல்லாரும் கொத்தடிமை தாண்டா! இந்த செங்கச்சுளையை விட்டு போயே ஆகணும்!
ரவி: நம்ம பூட்டன் பாட்டன் ஆவி எல்லாம் சாந்தி அடையும்!
கொத்தாளன்: சும்மா பேசாதீங்கடா! வெளியே போனா வேற என்ன வேலை கிடைக்குமாம்? நாலு எழுத்து படிச்சிருந்தாவது எங்கயாவது வேலைக்கு சேர முடியும்.
சின்னா: படிப்பை விடு! இத்தனை வருஷம் ஊருக்குள இருந்து விலகியே இருந்து ஒரு விவரம் கூட தெரியாது நமக்கு! யார் கிட்ட போயி வேலை கேப்போம்?
வக்கிலு: அடப்பயலுகளா! அதுக்கெல்லாம் கவலைபடாதீங்கடா! உலகம் பெருசு! இப்படி கொத்தடிமையா கிடந்து எப்படியோ வெளியே வந்து இப்போ சந்தோஷமா எவ்வளவோ பேரு இருக்காங்க!
குழு: அப்படியா?
வக்கீலு: நீங்களே பாருங்க!
காட்சி மாற்றம்:
ஒனரு வேட்டிய துவச்சு போட்டது அந்தக்காலம்!-
ஐயோ அந்தக்காலம்!
சொந்த வேட்டிய சலவைக்குப்போட்டது இந்தக்காலம்-
ஆமா இந்தக்காலம்!
ஒரு சொம்பு கூழை குடும்பமே குடிச்சது அந்தக்காலம்! -
ஐயோ அந்தக்காலம்!
வேளைக்கு வேளை சோத்தை தின்னுது இந்தக்காலம்-
ஆமா இந்தக்காலம்!
அடிமையா கிடந்து முதுகு நெளிஞ்சுது அந்தக்காலம்-
ஐயோ அந்தக்காலம்!
சொந்த காலுல நெஞ்சு நிமிருது இந்தக்காலம்!-
ஆமா இந்தக்காலம்!
கருங்கல்பாறை செங்கல்சூளை அந்தக்காலம்-
ஐயோ அந்தக்காலம்!
ரேஷன் கார்டு வீடுபட்டா இந்தக்காலம்-
ஆமா இந்தக்காலம்!
புள்ளைக தெருவில அலைஞ்சு திரிஞ்சுது அந்தக்காலம்!-
ஐயோ அந்தக்காலம்!
பால்வாடியில சேந்துபடிக்குது இந்தக்காலம்!
ஆமா இந்தக்காலம்!
ராமன்: யாருப்பா நீங்க?
1 : நாங்கல்லாம் மதுராந்தகத்துல அரிசி மில்லுல வேலை பாத்தவங்க. தொண்டு நிறுவனத்துல வேலை பாக்குறவங்க தான் எங்களுக்கு இப்படியொரு நல்லா வழிய காண்பிச்சாங்க!
கொத்தாளன்: நீங்க வெளியே வந்து சந்தோஷமாவா இருக்கீங்க?
2 : ஆமா! சொந்த தொழிலு!
3 : நிலப்பட்டா!
4 : ரேஷன் கார்டு!
5 : ஒட்டு அட்டை!
குழு: அடடடடா!
சந்தோஷம் மட்டும் இல்ல! சுதந்திரமா இருக்கோம்!
ராமன்: அண்ணே! தொண்டு நிறுவனம்னு சொன்னீங்களே! யாரு அது! அப்படி என்ன அண்ணே நல்ல வழிய காண்பிச்சாங்க?
1 : நம்ம சென்னை பட்டினத்துல IJM னு ஒரு நிறுவனம்.
2 : எங்களை மீட்டு எடுத்துட்டு வந்து ரெண்டு வருஷமா நிறையா பயிற்சி எல்லாம் தராங்க!
கொத்தாளன்: பயிற்சியா?
1 : ஆமா! கொத்தடிமையா இருந்து வெளிய வந்தா உலகமே புதுசா இருக்குமா இல்லையா? அதுக்கு வெளிய என்னென்ன வேலை வாய்ப்புகள் இருக்கு?
2 : கணக்கு வழக்கு பாக்குறது எப்படி?
1 : சொந்தமா தொழில் தொடங்குறது எப்படி?
2 : அரசாங்கத்துல நமக்குன்னு என்ன என்ன திட்டங்கள் இருக்கு?
1 : இப்படி எக்கசெக்கமா எங்களுக்கு பயிற்சி கொடுத்து கொத்தடிமையா இருந்து எங்களை முழு மனுஷனா மாத்திருக்கு!
ராமன்: ஒ! அப்படியா? அப்போ வெளிய வந்தா பிரச்சனையை இருக்காதுங்குரே!
2 : IJM மட்டும் இல்லப்பா! நூத்துக்கணக்கான நல்ல நல்ல சமூக அமைப்புகள், NGO க்கள், நம்ம பக்கம் இருக்கு!
1 : எல்லாத்துக்கும் மேல, அரசாங்கமே நம்ம பக்கம் இருக்கு!
குழு: நிஜமாவா?
2 : அட ஆமாய்யா! கொத்தடிமைய விட்டு வெளிய வந்ததும் 1000 ரூபா தருவாங்க!
1 : அது மட்டுமில்ல! ஆறு மாசத்துக்குள்ள 20000 ரூபா கொடுத்து ஏதாவது தொழில் பண்ணவும் உதவி செய்வாங்க!
2 : ஆமா! அதை வச்சு ஏதாவது தொழில் தொடங்கிக்கலாம்ல! அதுக்குத்தான்!
1 : சீக்கிரம் வெளிய வாங்கப்பா!
(அவர்கள் போனதும்)
கொத்தாளன்: இதெல்லாம் சரி படாதுப்பா!
சின்னா: கொத்தாளா! வாயை வெச்சுட்டியா? ஏண்டா அப்படி சொல்ற?
ராமன்: அவனுங்களை பாத்தா விவரமானவன்களா இருக்கானுங்க! நம்ம கூட்டத்துக்கு இதெல்லாம் சரி படாது!
கொத்தாளன்: அதுவும் நம்ம ஒனரு வீரப்பனுக்கு தெரிஞ்சுது லாரிய ஏத்திப்புடுவான்! தெரியும்ல?
சின்னா: எத்தனை நாளைக்குடா பயந்துகிட்டே கிடப்போம்?
உன் பிள்ளைங்களும் உன்னை மாதிரியே கொத்தடிமையாவே பொறந்து கொத்தடிமையாவே சாவும்! பரவாயில்லையா?
ரவி: உன்னை அடிப்பான்! சோறு போட மாட்டான்! வாழ்நாள் முழுக்க செத்து செத்து வாழனும்! பரவாயில்லையா?.
சின்னா: நல்லது கேட்டதுக்கு உன்னை மட்டும் தான் அனுப்புவான்! நீ இல்லாத நேரத்துல உன் பொண்டாட்டி கைய புடிச்சு இழுப்பான் பரவாயில்லையா?
(சிறிது யோசனைக்கு பிறகு)
கொத்தாளன்: வேண்டாம் மாப்ள! எப்படியாவது தப்பிக்கணும்!
ராமன்: எப்படியாவது தப்பிச்சே ஆகணும்!
(வக்கிலு தோன்றுதல்)
எதுக்கு பின்னே நான் இருக்கேன்? நான் சொல்லி தரேன்! மூணே வேலை!
முதல் வேலை!
NGO சாருக்கு போனை போடு!- உன்
நிலமைய அவருக்கு எடுத்து சொல்லு!
கொத்தாளன்: போனா? நம்பர் யாரு தருவா?
வக்கீலு: நான் தான் தருவேன், இந்தா எடுத்துக்கோ! 9884102221 ! (அங்குள்ளவரின் நம்பர்)
ரவி: பேரு?
வக்கிலு: (அங்குள்ளவரின் பெயர்)
(ராமன் போனை நம்பர் நம்பராக அடித்து பேச முற்படுகிறான்)
ராமன்: (ரகசியமாக) ஹலோ! ஐயா! நாங்க வீரப்பன் மிஷினுல வேலை செய்யரோம்யா!
குரல்: அப்படியா? உங்க பேரு என்ன?
ராமன்: ராமன் ஐயா!
குரல்: சொல்லுங்க ராமன்!
ராமன் : நாங்க இந்த வேலைல ரொம்ப கஷ்டபடுரோமுங்க! கூலி சரியா தர்றதில்ல! ரொம்ப நேரம் வேலை பாக்குறோம்! வெளியில எங்கயாவது போகணும்னா கூட விட மாட்டேங்குறான்! நாளுக்கு நாள் எங்க பிள்ளைகளை நெனச்சா தான் கஷ்டமாயிருக்கு! வக்கீலு ஐயா தான் உங்களுக்கு போனை போட சொன்னாரு!
குரல்: மொத்தம் எத்தனை பேரு இருக்கீங்க?
ராமன்: 21 பேரு!
குரல்: கவலைப்படாதீங்க! கொத்தடிமையா வேலை வாங்குறது சட்டப்படி குற்றம். அதனால அரசாங்க அதிகாரிகளையும் போலீசையும் சீக்கிரமா கூட்டிட்டு வந்து உங்களை மீட்க ஏற்பாடு செஞ்சுடுறேன்.
ராமன்: ரொம்ப நன்றிங்கய்யா!
குரல்: ஆனா அதுக்கு முன்னால நீங்க செய்ய வேண்டியது ஒன்னு இருக்கு!
ராமன்: என்னது ஐயா அது?
குரல்: அரசு அதிகாரிங்க வந்து விசாரிக்கும் போது உங்க சூழ்நிலைய சொல்லணும்! அதுக்கு நீங்க 21 பெரும் ஒத்துமையா இருக்கனும்! ஆழமா பேசி தப்பிக்கிறதுக்கு முடிவு செஞ்சு எந்நேரமும் தயாரா இருக்கணும்.
ராமன்: செஞ்சுட்டா போவுது! என்னடா சொல்றீங்க?
குழு: செஞ்சுட்டா போகுது!
(சாக்குப்பைகளை தனியாக பிடித்தபடி ஒவ்வொருவரிடமும் ரகசியம் பேசுகிறார்கள்)
ஒருவர் மட்டும் எழுந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்!
தாத்தா: ராசா! உங்க ஆசையெல்லாம் நல்லா தான் இருக்கு! நம்ம கூட்டத்துல யாராவது ஒருத்தன் மாட்டுனாலும் நம்ம எல்லாரும் பொணம்தான் !
ராமன்: தாத்தா! நம்ம எல்லாரும் ஒரு தடவை இதை செஞ்சா போதும்!
கொத்தாளன்: வாழ்நாள் முழுக்க பயமே இல்லாம நிம்மதியா இருக்கலாம்!
தாத்தா: மாட்டுனா உசிரு போயிடுமே?
ராமன்: இங்கயே இருந்தா தினமும் கொஞ்சகொஞ்சமா உசிரு போகுதே!
தாத்தா: சரி அத விடு! போலீஸ் வந்து நம்ம வாங்குன அட்வான்ஸ் பத்தி கேட்டா?
ரவி: தாத்தா! முக்கியமான கேள்வி கேட்ட! அட்வான்ஸ் எவ்வளவு தான் வாங்கி இருந்தாலும் கொத்தடிமையா வேலைக்கு வெச்சிருக்கிறது சட்டப்படி குத்தம்!
ராமன்: அது மட்டும் இல்ல! நம்ம எல்லாரும் வாங்குன அட்வான்சுக்கு மேலயே வேலை பாத்தாச்சு தாத்தா!
கொத்தாளன்: ஆமா தாத்தா! நாங்க நல்லா விசாரிச்சிட்டோம் தாத்தா!
(ஒருவர் எழுந்து பேச ஆரம்பிக்கிறார்)
பெரியப்பா: லே பசங்களா! கூடவோ குறையவோ இத்தனை வருஷம் நமக்கு சோறு போட்டவரை நம்ம எப்படி டா போட்டு குடுக்குறது?
மற்றோருவன்: ஆமப்போய்! என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வெச்சு தாலி எடுத்து தரேன்னு சொல்லி இருக்காரு.
சின்னா: என்ன பேசுறீங்க பெரியப்பா? இவ்வளவு நாளா சோறு போட்டாங்கன்னா சும்மாவா போட்டாரு? செஞ்ச வேலைக்கு தானே போடுறாரு?
கொத்தாளன்: அதுக்கு கூட எங்க போடுறாரு? இந்த பாருங்கோ! விசுவாசம் இருக்க வேண்டியது தான்! ஆனா, நம்மள ஞாயமா நடத்துற முதலாளிக்கு தான் விசுவாசமா இருக்கணும். நம்ம உழைப்ப சுரண்டுற நம்ம நிம்மதியா கெடுத்து அவன் நிம்மதிய சம்பாதிக்கற முதலாளிக்கு நம்ம விசுவாசத்த காட்ட வேண்டிய அவசியம் இல்ல!
ரவி: அது மட்டும் இல்ல! நம்ம யாரையும் போட்டு குடுக்க போறது இல்ல! நம்மள நம்ம காப்பாதிக்கிறோம், அவ்வளவு தான்!
ராமன்: ஏன்பா? உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிரேன்னா சொன்னாரு? ஒரு மஞ்ச கயித்த வாங்கி குடுத்து அதையும் உன் கூலியில கழிச்சிடுவாரு ஞாபகம் வெச்சிக்கோ!
தாத்தா: அப்ப முடிவு?
குழு: ஒண்ணா இருப்போம்! அதிகாரிகள் வந்து கேள்வி கேக்கும் போது தைரியம்மா உண்மைய சொல்றோம். சரியா?
தாத்தா: சரி!
குழு: சரி
வக்கீலு: ரெண்டாவது வேலை!
இருக்குறவங்க எல்லாம் ஒண்ணா சேருங்க!
ஒத்துமையா இருந்து உங்களை நீங்களே காப்பாத்திகிறதுக்கு தயாராகுங்க.

(அனைவரும் தூங்கி இருக்க)
கொத்தாளன்: நம்பரை போடு ரவி! டேய் சின்னா! போய் யாராவது வர்றங்களான்னு பாத்துக்கோ!
சின்னா: சரி கொத்தாளா !
(ரவி பேப்பரை பார்த்து நம்பரை எடுக்க)
குரல்: என்ன ரவி! எல்லாம் தயாரா?
ரவி: தயாரு ஐயா!
குரல்: சரி! நல்லா கேட்டுக்கோங்க! நாளைக்கு காலைல 4 மணிக்கு அதிகாரிங்க, போலீசோட உங்க செங்கச்சூளைக்கு வந்துடுவோம்! உங்க பொருள் எல்லாத்தையும் தயாரா வைச்சுகோங்க!
ரவி: சரி ஐயா!
குரல்: எல்லாரும் ஏத்துக்கிட்டு தயாரா இருக்காங்கல்ல?
ரவி: எல்லாரும் தயார்!
வக்கிலு: என்ன மக்களே! இதுக்கு அப்புறம் என்ன தெரியுமா?
மூணாவது வேலை! அதிகாரிங்க வரும் போது உண்மையை தைரியமா தெளிவா சொல்லி கச்சிதமா அந்த இடத்த விட்டு போலீசோட வந்துடனும்!
(போலீஸ் வருதல்)

அதிகாரி: யாரு இங்க முதலாளி!
குழு: இவரு தான்! இவரு தான்!
(முதலாளியை காட்டுகிறார்கள்)
அதிகாரி: முன்னால வாங்க! முதலாளி!
(முதலாளி வருகிறார்)
அதிகாரி: கூலி எவ்வளவு குடுத்த?
முதலாளி: தலைக்கு 120 ரூபா தர்ரேங்க!
குழு: பொய்! பொய்! தலைக்கு 50 ரூபா தான் தருவாருங்க!
அதிகாரி: எத்தனை மணி நேர வேலை?
முதலாளி: 8 மணி நேரம் ங்க!
குழு: பொய்! பொய்! 2 மணி நேரம் தூங்குவோமுங்க! மிச்ச நேரம் பூர வேலை தானுங்க!
அதிகாரி: வெளிய போக அனுமதி உண்டா?
முதலாளி: உண்டே! காலைல எழுந்துச்சதும் போயிடுவானுங்கலே! சொல்றா ! (கொத்தாளனை அதட்டுகிறார்)
குழு: ஐயா! ஜோக் அடிக்கிறாராம்! சிரிச்சிடாதீங்க! ஒரு நல்லது கேட்டதுக்கும் அனுப்புறதில்ல!
சின்னா: வேற வேலைக்கு போறோம்னு சொன்னதுக்கே ரெண்டு நாள் அடிச்சாருங்க!
அதிகாரி: அப்போ, 1976 ஆம் ஆண்டு கொத்தடிமை சட்டத்தின் படி,
முதலாளிக்கு,

ஜெயிலு! ஜெயிலு!
ஜெயிலு!ஜெயிலு!
அப்பாவிகள வேலைக்கு வெச்சு கொடுமை செஞ்சா பாவமுங்க!
அதிக வேலைய கொறஞ்ச கூலிக்கு இழுத்தா அதுவும் குத்தமுங்க!
முடிஞ்சா உடனே திருந்துங்க! இல்லாக்காட்டி ஜெயிலுங்க!
(அதிகாரிகள் முதலாளியை இழுத்துச்செல்ல வக்கீலு தோன்றுகிறார்)
வக்கீலு: என்ன கொத்தாளா! சின்னா! ரவி! விடுதலை ஆகியாச்சா?
சின்னா: ஐயா! உங்களுக்கு தான்யா நன்றி சொல்லோனும்!
கொத்தாளன்: நீங்க மட்டும் இல்லன்னா நாங்க கொத்தடிமையாவே செத்துருப்போம் ஐயா!
ரவி: நாங்க மட்டும் இல்ல! எங்க குலமே உங்களுக்கு கடமை பட்டிருக்கு சாமி!!!
(கொத்தாளன் பூட்டனாகவும் ராமன் பாட்டன் ஆவியாகவும் வந்து விடுகிறார்கள்)
பாட்டன்: அடே பயலுகளா! யாரு வந்துருகேன்ன்னு தெரியுதாடா?
கொத்தாளன்: தாத்தா உன்ன தெரியாம போகுமா? சொல்லு தாத்தா!
சின்னா: சரியான நேரத்துக்கு நெருப்பு மாதிரி வந்துட்டியே தாத்தா!
ராமன்: தாத்தா ஆவிகலே! முன்ன எல்லாம் கனவுல
தான் வந்த! இப்போ எல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு நேருலையே வந்துடுரீயே தாத்தா!
பூட்டன்: பயம் விலகுனவனுக்கு தான் டா நாங்க தெரிவோம்! உங்களுக்கு எங்களோட பரிபூரண ஆசீர்வாதம் உண்டு!
பூட்டன்: பயம் விலகுனவனுக்கு தான் டா நாங்க தெரிவோம்! உங்களுக்கு எங்களோட பரிபூரண ஆசீர்வாதம் உண்டு!
பாட்டன்: உங்களுக்கு மட்டும் இல்ல! நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சவங்க யாரு கொத்தடிமையா
இருந்தாலும் இந்த மகனுக்கு போன் போடுங்க! (NGO ஆளை அறிமுகப்படுத்துகிறார்)
பூட்டன்: இவரு கைய கூப்பி நிக்கிறாரே! தேர்தல்ல நிக்க போறாரான்னு நெனச்சிக்காதீங்க!
இவர் தான் _____________
.
பாட்டன்: உங்க சொந்தகாரரோ, பக்கத்து வீடோ, எதிர் வீடோ, வேற தெரிஞ்சவங்களோ, இல்ல தெரிஞ்சவங்களுக்கு தெரிஞ்சவங்களோ, அவங்க கொத்தடிமையா வேலை பாத்தாங்கன்னா உடனே இவருக்கு போன் போடுங்க!
பூட்டன்: இவரோட நம்பரு________________. சொல்லுங்கடா கோரசா....
குழு: _________________
பாட்டன்: டே பயலுகளா! சீக்கிரம் உங்க பொஞ்சாதி புள்ளைங்களோட கொத்தடிமைய விட்டு வெளிய வாங்கப்பா! அப்போ தான் உங்க பூட்டன் பாட்டன் ஆவி எல்லாம் சாந்தி அடையும்!
குழு: _________________
பாட்டன்: டே பயலுகளா! சீக்கிரம் உங்க பொஞ்சாதி புள்ளைங்களோட கொத்தடிமைய விட்டு வெளிய வாங்கப்பா! அப்போ தான் உங்க பூட்டன் பாட்டன் ஆவி எல்லாம் சாந்தி அடையும்!
பூட்டன்: இவனுக கொத்தடிமைய விட்டு வெளிய வரபோற
செய்திய மேல் லோகத்துல எல்லாருக்கும் சொல்றோம்! என்ன பங்காளி! மலை ஏறுவோமா?
பாட்டன்: ஏத்துடா கற்பூரத்த!
குழு1: பூட்ட தாத்தா!
குழு 2 : கொள்ளு தாத்தா!
ஒனரு வேட்டிய துவச்சு போட்டது அந்தக்காலம்!-
ஐயோ அந்தக்காலம்!
சொந்த வேட்டிய சலவைக்குப்போட்டது இந்தக்காலம்-
ஆமா இந்தக்காலம்!
பாட்டன்: ஏத்துடா கற்பூரத்த!
குழு1: பூட்ட தாத்தா!
குழு 2 : கொள்ளு தாத்தா!
ஒனரு வேட்டிய துவச்சு போட்டது அந்தக்காலம்!-
ஐயோ அந்தக்காலம்!
சொந்த வேட்டிய சலவைக்குப்போட்டது இந்தக்காலம்-
ஆமா இந்தக்காலம்!
ஒரு
சொம்பு கூழை குடும்பமே குடிச்சது அந்தக்காலம்! -
ஐயோ அந்தக்காலம்!
வேளைக்கு வேளை சோத்தை தின்னுது இந்தக்காலம்-
ஆமா இந்தக்காலம்!
அடிமையா கிடந்து முதுகு நெளிஞ்சுது அந்தக்காலம்-
ஐயோ அந்தக்காலம்!
சொந்த காலுல நெஞ்சு நிமிருது இந்தக்காலம்!-
ஆமா இந்தக்காலம்!
கருங்கல்பாறை செங்கல்சூளை அந்தக்காலம்-
ஐயோ அந்தக்காலம்!
ரேஷன் கார்டு வீடுபட்டா இந்தக்காலம்-
ஆமா இந்தக்காலம்!
புள்ளைக தெருவில அலைஞ்சு திரிஞ்சுது அந்தக்காலம்!-
ஐயோ அந்தக்காலம்!
பால்வாடியில சேந்துபடிக்குது இந்தக்காலம்!
ஆமா இந்தக்காலம்!
ஐயோ அந்தக்காலம்!
வேளைக்கு வேளை சோத்தை தின்னுது இந்தக்காலம்-
ஆமா இந்தக்காலம்!
அடிமையா கிடந்து முதுகு நெளிஞ்சுது அந்தக்காலம்-
ஐயோ அந்தக்காலம்!
சொந்த காலுல நெஞ்சு நிமிருது இந்தக்காலம்!-
ஆமா இந்தக்காலம்!
கருங்கல்பாறை செங்கல்சூளை அந்தக்காலம்-
ஐயோ அந்தக்காலம்!
ரேஷன் கார்டு வீடுபட்டா இந்தக்காலம்-
ஆமா இந்தக்காலம்!
புள்ளைக தெருவில அலைஞ்சு திரிஞ்சுது அந்தக்காலம்!-
ஐயோ அந்தக்காலம்!
பால்வாடியில சேந்துபடிக்குது இந்தக்காலம்!
ஆமா இந்தக்காலம்!
No comments:
Post a Comment